69-வது பிறந்த நாளையொட்டி நடிகர் சிரஞ்சீவி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் சீரஞ்சீவிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிரஞ்சீவி தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.