தமிழக பாஜக முன்னாள் தலைவர் S.P.கிருபாநிதி மகன் S.P.K.உமாசந்திரன் தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்த தலைவர்களில் ஒருவருமான, அமரர் திரு S.P.கிருபாநிதி மகன் S.P.K.உமாசந்திரன் அவரது குடும்பத்தினரையும் இன்று கடலூரில் அவர்களது இல்லத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்றொரு பதிவில், புவனகிரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், பாஜக
தேசியப் பொதுக்குழு உறுப்பினருமான, . அருளின் மகன் A. சிவமகேஷ், மணமகள் B. பவித்ரா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. மணமக்கள் இருவரும், அனைத்து வளங்களும் பெற்று, நலமுடன், மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாலை தெரிவித்துள்ளார்.