ஈரோட்டில் கீழ்பவானி கால்வாயின் சீரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்காமல் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், கால்வாயின் வடிகால் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக கீழ்பவானி விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
முதல் போக பாசனத்திற்காக, பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் வடிகால் குழாயில் கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
இதனிடையே நீதிமன்ற உத்தரவுபடி கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.