பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்வுக்கு கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் ஸ்ரீஜேஷ் கோல் கீப்பராக இருந்தார்.
இவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீஜேஷ்க்கு பரிசுத்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.