திருப்பதி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பக்தர்கள், உள்ளூர் மக்களை தேவஸ்தானம் போர்டு கேட்டுககொண்டுள்ளது.
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் தேவைக்காக கோகர்பம், ஆகாச கங்கை, பாபவிநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்தும், கல்யாணி நீர்த்தேக்கத்தில் இருந்தும் தேவஸ்தானம் தண்ணீர் பெறுகிறது.
திருப்பதி மலையில் உள்ள ஐந்து அணைகளின் நீர் கொள்ளளவு 14 ஆயிரத்து 34 லட்சம் கேலன் ஆக இருக்கும் நிலையில் தற்போது அவற்றில் 5 ஆயிரத்து 800 லட்சம் கேலன் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பதி மலையில் இருப்பு இருக்கும் தண்ணீரை அடுத்த 120 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பக்தர்கள், பொதுமக்கள், ஹோட்டல் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு தேவஸ்தானம் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
















