பொருளாதாரத்தில் 11 -வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது” என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமிர்தா பல்கலைக்கழகத்தின் 9-ஆவது மையத்தினை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “2047 -ம் ஆண்டில் இந்தியா உலகில் முதல் நாடாக திகழும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
அதேபோன்று, கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், “கல்விக்கு மட்டும் மத்திய அரசு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது “எனவும், குறிப்பாக, உயர் கல்விக்கு மட்டும் 47 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனவும் சுட்டிக்காட்டினார்.
ரயில்வே துறையில் மற்ற நாடுகளை சார்ந்திருந்த இந்தியா, பிரதமர் மோடி ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளதாக கூறினார்.