திமுகவில் கொடி பிடிக்க மட்டுமே இளைஞர்களை பயன்படுத்துவதால், யாரும் கட்சியில் சேருவதில்லை என அக்கட்சியின் நிர்வாகி ஒருவரே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அவைத் தலைவர் கே. ஜி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காளி கலைவாணன், திமுகவில் பொது உறுப்பினர்கள் கூட்டம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், திமுகவில் கொடி பிடிக்க மட்டுமே இளைஞர்களை பயன்படுத்துவதால் புதிதாக இளைஞர்கள் கட்சியில் சேருவதில்லை எனவும் பேச கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.