கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இவரது கொலைக்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இவ்வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கருதப்படும் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ் மற்றும் நான்கு மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
இதற்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய நிலையில் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.