சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் சுற்று நடைபெற்றது.
இதில் இந்திய முன்னணி வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்ற நிலையில், குறைந்த பட்சமாக 83.13 மீட்டருக்கும், அதிக பட்சமாக 89.49 மீட்டருக்கும் ஈட்டியை எறிந்து சாதனை படைத்தார். இதன் மூலம் அவருக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.