புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் ஆட்சியர் குலோத்துங்கன் நேரில் ஆய்வு நடத்தினார்.
கைதிகள் குற்றத்திற்கு ஏற்ப தனிதனியாக அடைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், காலப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறையில் ஆட்சியர் குலோத்துங்கண் ஆய்வு நடத்தினார்.
சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், கைதிகள் தங்கும் அறை உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார்.