அமெரிக்கா அதிபர் பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளராக தம்மை தேர்வு செய்ததற்கு மனப்பூர்வமான நன்றி என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில், கமலா ஹாரிஸ் பேச தொடங்கியதும் கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.
பின்னர் உரையாற்றிய அவர், அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன் என உறுதியளித்தார். மேலும், அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தமது நடவடிக்கைகள் தொடரும் என கூறினார்.