தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலா தலமான பழைய குற்றால அருவி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தற்போது வனத்துறையின் வசம் வந்துள்ளது.
பொறுப்புகளை கையில் எடுத்த வனத்துறையினர் இந்த பகுதியை தீவிர பாதுகாப்பு மண்டலமாக கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் வனத்துறை சார்பாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.