தென்காசி மாவட்டம், சுரண்டையில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
சுரண்டை நகராட்சி அருகே ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று பொதுமக்களை விரட்டியுள்ளது.
அப்போது, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 10 பேரை விரட்டி சென்று கடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் அனைவரும் தென்சாமி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுரண்டை நகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தெருநாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.