சேலத்தில் புகழ் பெற்ற கரபுரநாதர் கோவிலில், புதிய கொடிமரம் அமைப்பதற்காக 15 அடி நீளம் கொண்ட தேக்கு மரம் கொண்டு வரப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இக்கோவிலில் 2 லட்சத்து பத்து ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய கொடி மரம் தயார் செய்யப்படுகிறது. அறநிலையத்துறை அனுமதி பெற்று, பழைய கொடிமரம் அகற்றப்பட்டு, புதிய கொடி மரம் விரைவில் பிரதிஷ்டை செய்யப்படும் என திருக்கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.