அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி வெடித்து, ஏற்பட்ட புகை மூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்.
இப்பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கணினி அறையில் ஏற்பட்ட புகை மூட்டம் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்.
அவர்களை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர், புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.