தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது பள்ளி பேருந்து மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சில்லாங்குளத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது.
கயத்தார் அசன் நகர் பகுதியில் சென்றபோது குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி சாலையோரம் நின்றது. இதில் பள்ளி மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.