திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
முருகக்கடவுளின் 2-ம் படை வீடாக போற்றப்படும் இக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் உற்சவர் வீதியுலா நடத்தப்பட்டது.
இதையடுத்து 12 நாட்கள் நடத்தப்படும் ஆவணித் திருவிழாவுக்காக மேளதாளம் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்திற்கு பட்டாடை அணிவித்து வேத மந்திரங்களுடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் குடும்பத்துடன் வருகை தந்த பக்தர்கள் கோயிலிலேயே தங்கியிருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.