ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம் போலீசாரிடம் சிக்கியது
சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, 2020ஆம் ஆண்டு வரை இவரிடம் சம்போ செந்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மனைவியிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய உருவம் குறித்த புகைப்படத்தை போலீசார் பெற்றுள்ளதாகவும்
கடந்த 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தை வைத்து தனிப்படை போலீசார் சம்பவம் செந்திலை தேடி வந்த நிலையில் தற்போது போலீசாருக்கு புதிய உருவம் குறித்த புகைப்படம் சிக்கி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் தொடர்ச்சியாக சம்போ செந்தில் விபிஎன் செயலியை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 5 பேரிடம் பேசி வருவது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டு வெடிகுண்டு கொடுக்க மூளையாக செயல்பட்ட ரவுடி புதூர் அப்புவை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
வெளி மாநிலங்களுக்கு செம்பியம் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
ரவுடி சம்போ செந்தில் உத்தரவின் பேரில் அவரது கூட்டாளி புதூர் அப்பு நாட்டு வெடிகுண்டுகளை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.