கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பட்டன.