நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பிதர்காடு வனப்பகுதி யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கடந்த 20ஆம் தேதி 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இதனையடுத்து புலிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவை விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த வனத்துறையினர், புலிக்கு விஷம் வைத்துக் கொன்றதாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.