தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் இருந்த நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடம் இடித்து தள்ளப்பட்டது.
ஷில்பாராமம் பகுதியில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான மாநாட்டு அரங்கம் செயல்பட்டு வந்தது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து இந்தக் கட்டடம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஹைதராபாத் பேரிடர் மேலாண்மை மற்றும் சொத்து பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கட்டடத்தை பொக்லைன் மூலம் இடித்து தள்ளினர்.