கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து போட்டியில் உருகுவே அணியை சேர்ந்த வீரர் இதயதுடிப்பு குறைவு ஏற்பட்டு மைதானத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரேசிலில் உள்ள மொரம்பிஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சாவ் பாலோ – உருகுவே அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கி முதல் பாதி முடிவடைந்த நிலையில் உருகுவே அணியை சேர்ந்த வீரர் டிபெண்டர் ஜுவான் இஸ்கியர்டோ திடீரென மயக்கமடைந்தார்.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டடார். இந்நிலையில் அவரின் அணியான கிளப் நேஷனல் டி கால்பந்து அணி, வீரர் இஸ்கியர்டோவுக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.