எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக நாகையை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சிவராஜ், ராஜேந்திரன் உள்ளிட்ட 11 மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 பேரையும் கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
















