சென்னை அருகே தனியார் அமைப்பு நடத்தும் பார்முலா-4 கார் பந்தயம் தொடங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற இருந்த இந்த போட்டியை சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி 5 சுற்றுகளாக நடத்தப்படும் இந்த கார் பந்தயம் இன்றும், நாளையும் இருங்காட்டுக்கோட்டையில்நடைபெறுகிறது.
இதில் பயிற்சி சுற்று மற்றும் தகுதி சுற்று ஆகியவை நடந்து முடிந்த பின் பிரதான போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் இந்த பந்தயத்தில் இந்திய வீரகள் ஜேடன் ரேமன் பரியாட், அபய் மோகன், ருஹான் ஆல்வா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.