இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவரும், எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான, பாரிவேந்தர் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவரும், எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான, பாரிவேந்தருக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த பண்பாளரான பாரிவேந்தர் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது கல்வி மற்றும் சமூகப் பணிகள் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.