சென்னையில் நடைபெற்று வரும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று முதல் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் அகமதாபாத் எஸ்.ஜி.பைப்பர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்பூர் பேட்ரியாட்ஸ், பெங்களூரு ஸ்மேஷர்ஸ், புனேரி பல்தான் டிடி, யு மும்பா டிடி என மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றுள்ள
இந்த போட்டியில் ஒவ்வொரு போட்டியிலும் 2 ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்கள், 2 மகளிர் ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் 1 கலப்பு இரட்டையர் ஆட்டம் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடத்தப்படும்.
இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதன் படி மனிகா தலைமையிலான பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணிகள் தமிழ்நாடு வீரர் சென்னை லயன்ஸ் அணிகள் இடையேயான லீக் போட்டியில் 11-4 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணி தோல்வியடைந்தது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் புனேரி பால்தான்ஸ் அணி அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் அணியை 10-5 புள்ளி கணக்கில் வீழ்த்தியது.