ஜம்மு- காஷ்மீர், ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, டெல்லி பாஜக தலைமையகத்தில் நாளை கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 25 ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதேபோல, ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 1-இல் நடைபெறுகிறது.
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நாளை பாஜக மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்று தேர்தல் வியூகம் வகுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.