உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி ஆரத்தழுவியது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலென்கியுடன் கை குலுக்கி அவரை ஆரத்தழுவினார். இதேபோல ரஷ்யா சென்றபோது அந்நாட்டு அதிபர் புதினை பிரதமர் மோடி கட்டியணைத்து நட்பை பரிமாறிக் கொண்டார்.
எதிரெதிர் துருவங்களாக இருக்கும் ரஷ்யா, உக்ரைன் அதிபர்களை பிரதமர் மோடி ஆரத்தழுவியது தொடர்பாக மேற்கத்திய செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இதுதான் இந்திய பண்பாடு என்று கூறினார்.