தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சனி ,ஞாயிறு, மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா என மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நீராடி மகிழ்ந்தனர். தீவிர சோதனைக்கு பின்னரே, வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை அனுமதித்தனர்.