நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள கிளாத்தி வகை மீன்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் நாட்டுப்படகுகள் மூலம் மீன்களை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கூடங்குளம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
கரை ஒதுங்கிய மீன்கள் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் பிடிக்கப்பட்டு விற்பனை ஆகாததால் கடலில் கொட்டப்பட்டதாக ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடற்கரை பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் கரை ஒதுங்கிய மீன்களை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.