மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
பழமையான கோயில்களின் ஒன்றான மஹாகாலேஷ்வர் கோயிலில் அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், மஹாகாலேஷ்வர் கோயிலில் அதிகாலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.