மறைந்த தேமுதிக முன்னான் பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது பிறந்த தினத்தில் நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக நிறுவனருமானவிஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று.
தமிழ் சினிமாவில் உள்ள எளிய கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொண்டவர். தனது சமுதாய சேவைகளின் மூலம் நம்மிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் “பத்ம பூஷன் விஜயகாந்த்” அவர்களின் பிறந்த தினத்தில் நினைவு கூர்வோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.