கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2026, 06:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தரிசனம் மேற்கொண்டார்.

3 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மங்களூரு வந்தடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சாலை மார்க்கமாக கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார்.

அப்போது, பாரம்பரிய முறைப்படி மேல் சட்டையின்றி, துண்டு போர்த்தியபடியே அவர் கோயிலுக்குள் நுழைந்தார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பக்தர்களின் தரிசனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்ததால், முதலமைச்சர் ஜோசப் விஜய் மட்டும் நேரடியாக மூகாம்பிகையின் சன்னதிக்கு சென்று வழிபட்டார். அவருக்காக சிறப்பு பூஜையும், ஆராதனையும் நடைபெற்றன.

அப்போது அம்மனின் பாதத்தில் வைத்து பூஜித்த சிறப்பு கயிறு ஒன்றை விஜய்யின் வலது கையில் கட்டிய அர்ச்சகர், கோயிலின் சிறப்பு குறித்தும் விளக்கினார். முன்னதாக, கோயிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள இரண்டரை அடி நீள வெள்ளி வாளை முதலமைச்சர் ஜோசப் விஜய் காணிக்கையாக அளித்தார்.

Tags: karnatakaMangaluru.Tamil Nadu Chief Minister Joseph VijayKollur Mookambika Temple
Share
Tweet
SendShare
Previous Post

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

Next Post

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies