புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
ஓணாங்குடியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் சார்பில் நடைபெற்ற போட்டியில் 47 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
இதில் அடுத்தடுத்து இலக்கை நோக்கி ஓடிய காளைகளை பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
அதனைத்தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.