மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மும்பையில் ஏஜிஸ் பெடரல் லைஃப் இன்சூரன்ஸ் சார்பில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
இந்த மாரத்தான் ஓட்டத்தை முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.