அமைரிக்கா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவில் கடற்படை போர் பயிற்சி மையத்தை பார்வையிட்டார்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமது அமெரிக்க பயணத்தின்போது டென்னெசி மாகாணம் மெம்பிஸ் நகரிலுள்ள கடற்படை போர் பயிற்சி மையத்தை (NSWC) பார்வையிட்டார்.
நீர்மூழ்கிக் கப்பல்கள், டார்பீடோ எனப்படும் நீர்மூழ்கிக்குண்டுகள், கடற்படை கப்பல்கள், அவற்றுக்கான புரொபெல்லர் எனப்படும் உந்துவிசைக்கலன்கள் போன்றவற்றை சோதிக்கும் உலகின் மிகப்பெரிய நவீன ஆய்வுக்கூடங்களில் இது ஒன்றாகும்.
அங்குள்ள வசதிகள் பற்றி அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர், இந்தியக் கடற்படையின் சிறப்புச் செயல்பாடுகள் பிரிவு தலைமை இயக்குநர், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின் பாதுகாப்புத் தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் பலர் உடன் சென்றனர். அவர்களை அங்கு அமெரிக்க கடற்படைக் கொள்கைப்பிரிவு உதவி துணைச்செயலாளர் வரவேற்றார்.
அம்மையத்தின் தலைவர், தொழில்நுட்ப இயக்குநர் ஆகியோர் அங்குள்ள வசதிகள் பற்றி அமைச்சருக்கு விளக்கினர். உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியாவில் இதேபோன்ற வசதியை நிறுவுவதற்கான தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இப்பயணம் அமைகிறது.