கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் கைதான அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சீல்டா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அந்த வகையில், கைதான சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர்.