தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டுரங்கன் கோயிலில், ஏராளமான சிறுவர், சிறுமியர்களுக்கு கிருஷ்ணன், ராதை வேடமணிந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வேடமணிந்து ஊர்வலமாக வலம்வந்த சிறுவர்- சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி கதிர்வேல் நகரில் அமைந்துள்ள ராதாகிருஷ்ணன் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நடைபெற்ற கிருஷ்ணர், ராதை வேடம் புனைதல் போட்டியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் வேடம் அணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்கள் குவிந்தனர். வாழ்வில் மகிழ்ச்சி கூடவும், குழந்தைப் பேறு வேண்டியும் பக்தர்கள் விரதமிருந்து கிருஷ்ண பெருமானை வழிபட்டனர்.