சேலம் மாவட்டம், அழகாபுரத்தில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
அழகாபுரத்தில் உள்ள தனியார் கட்டட நிறுவனத்தில் சதீஷ் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே குடும்ப விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த சக்திவேல் இரும்பு கம்பியால் சதீஷின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அழகாபுரம் போலீசார், சதீஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சக்திவேலை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.