கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால் மேட்டுப்பாளையம் ஏல மையங்களில் வாழைத்தார்களின் விலை சரிந்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பிரதானமாக வாழை விவசாயம் உள்ள நிலையில், ஓணம் பண்டிகைக்காக அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இந்தாண்டு ஓணம் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்தது.
இதன் எதிரொலியாக மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்படும் வாழைத்தார் ஏல மையங்களில் நேந்திரன், கதலி உள்ளிட்ட வாழைத்தார்களின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 10 நாட்களுக்கு முன்பு கிலோ 50 ரூபாய் வரை விற்பனையான நேந்திரன் வாழை தற்போது 40 ரூபாய்க்கு ஏலம் போவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.