கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிருஷ்ணர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், விசேஷமான ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, சென்னை, அக்கரையில் உள்ள இஸ்கான் ஆலயத்தில் தரிசனம் செய்து, மக்களின் நலனுக்காக பூஜை செய்தேன்.
ஆலயத்தில் திரளான பக்தர்கள் மத்தியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் காட்டிய உலகளாவிய அன்பு மற்றும் தன்னலமற்ற கடின உழைப்பு பாதையில் நாமும் நம்மை அர்ப்பணிப்போம் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.