மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதாக நடிகை நமீதா புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கோவிலுக்குள் அனுமதி கோரியபோது, இந்து எனும் சான்றிதழ் உள்ளதா, சாதி சான்றிதழ் உள்ளதா? என அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெளியே இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை என பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே சந்தேகத்தின் அடிப்படையில் நடிகை நமீதாவிடம் மதம் குறித்து கேள்வி கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரபலங்கள் மற்றும் வெளிநாட்டினர் வரும்போது விசாரிப்பது வழக்கமான நடைமுறையே எனவும் கோயில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.