கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் மீனச்சலில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணன் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகம் – கேரள எல்லையான மீனச்சலில் அமைந்துள்ள கிருஷ்ண சாமி கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் உறியடி திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.