திண்டுக்கல் மாவட்டம், பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டின் அரங்குகளை பார்வையிட பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள், பரதம் மற்றும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் என பலரும் பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.
மாநாடு நிறைவடைந்தாலும், வரும் 30ஆம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகளை மக்கள் பார்வையிடலாம் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ள நிலையில், மாநாட்டில் உள்ள அரங்குகளை பார்வையிட மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.