தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற கிருஷ்ண ஜெயந்தி தொடர்பான பாடல்கள், எப்போதும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன. அவ்வாறு ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல்களை தற்போது பார்க்கலாம்.
கிருஷ்ணர் ஜெயந்தி ப்ளே லிஸ்ட்
மகாவிஷ்ணு உடைய அவதாரங்களுல ஒன்னு தான் கிருஷ்ணர் அவதாரம். கிருஷ்ணர் தனக்காக இல்லாம பிறருக்காக வாழ்ந்தவருன்னு புராணக்கதைகளுல படிச்சிருப்போம். அதனால தான் கிருஷ்ணன்ன கண்ணா முகுந்தான்னு சொல்றோம். இந்த சின்னக் கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில ரோகிணி நட்சத்திரத்தோடு அவதரித்தவர். இதனால அஷ்டமி திதிக்கு பத்து நாளுக்கு முன்பே கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். முக்கியமாக நெய், வெண்ணையால செஞ்ச பலகாரங்களும், வீட்டுல இருக்குற குழந்தைகளுக்கு கண்ணன் ராதைவேஷமும் போட்டுகிட்டு கிருஷ்ணர் ஜெயந்தியை ரசனையா கொண்டாடுவோம் .
கண்ணனை தோழனாக, சேவகனாக, நண்பனாக என்று பல நிலைகளில் வைத்து தமிழ் சினிமாவில் பாடல்கள் வருவதுண்டு. கதைக்கு களத்துக்கும் சமந்தமே இல்லனாலும் படத்துல கண்ணனுக்காக எழுதுற பாடல்கள் எல்லாமே ஹிட் தான். இப்படி தமிழ் சினிமாவுல கிருஷ்ணருக்காக உருவாக்கப்பட்ட பாடல்களை 60கள்லருந்தே வந்துகிட்டு தான் இருக்கு.
கங்கை கரை தோட்டம்
ஒரு பெண்ணினோட தேவைகளயும் உணர்வுகளையும் கண்ணன் கிட்ட உரிமையோட கேள்வி கேட்கிற மாதிரி உருவான பாடல்கள அந்த காலத்துலருந்து இந்த காலத்து பெண்கள் வர உருக்கமா கேட்க தான்செய்றாங்க
கருமை நிற கண்ணா
ஆயர்பாடியில கண்ணன தேடி போற ராதாக்கு கண்ணன் அங்க இல்லன்னா என்ன ஆகும். ராதையோட கண்கள் கண்ணன தேடி அழைப்பாயும், எப்ப என் கண்ணன் வருவாருன்னு எதிர்பார்க்கும் ராதையுடைய கண்கள். இந்த வரிகள் எல்லா காதலர்களுக்குமே ஒத்து போகும்.
யமுனை
இப்படி தேடி கிட்டு இருந்த ராதை மனசுல இருக்குற ரகசியம் என்ன. அத கண்டுபிடிக்க சீக்கிரமா வா என் கண்ணான்னு ராதா கூச்சுலிடுகிற பாட்டு எந்த நேரமும் முனுமுனுக்க வைக்கும்
ராதை மனதில்
இந்த வரிகளுக்கு பதில் சொல்றபடி கண்ணன் அந்தி மாலையில் தான் வருவாருன்னு தெரிஞ்ச ராதை போடுற குத்தட்டாம் தான்
கண்ணன் வரும் வேலை அந்தி மாலை
அந்திமாலையில கண்ணன்ன கண்ட ராதை எனக்கு வரம்தான்னு ஏங்குகிறா. அந்த ஏக்கத்தோட கண்ணன் புகழ முழுசா பாடி உன் காலடி பட்ட திருமணம் ஆகும்ன்னு கேட்கிற விதம் உச்சம்
முகுந்தா முகுந்தா
தனக்காக வந்த கண்ணன் கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு தேவையான வரங்களையும் கேட்டுட்டு களைப்பா இருக்குற கண்ணன் தூங்க வைக்கறிதுக்குன்னே தனி பாடல்
கண்ணா நீ தூங்கடா
சரி இதலாம் இருக்கட்டும் கிருஷ்ணர் ஜெயந்தி இப்படி தான் ரொம்ப அழகா கொண்டாடு வாங்கன்னு அற்புதமான காட்சிகள் டான்ஸ்ன்னு காட்டுன பாடல் காலம் கடந்தாலும் கிருஷ்ணர் ஜெயந்திக்கு ஒஉளிக்கும் என்பதுல சந்தேகம் இல்ல.