இந்திய கடலோர காவல்படை இரவுநேர மீட்பு பணியின் போது 11 பேரை மீட்டுள்ளது.
சரக்கு கப்பல் ஒன்று கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சாகர் தீவுக்கு (மேற்கு வங்கம்) தெற்கே சுமார் 90 கடல் மைல் தொலைவில் மூழ்கியதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவல் சென்னை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு கிடைத்தது. கொல்கத்தாவில் உள்ள ஐ.சி.ஜியின் பிராந்திய தலைமையகம் (வடகிழக்கு) உடனடியாக இரண்டு ஐ.சி.ஜி கப்பல்களையும் ஒரு டோர்னியர் விமானத்தையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியது.
டோர்னியர் விமானத்தின் வழிகாட்டுதலுடன், ஐ.சி.ஜி கப்பல் சம்பவ இடத்தை அடைந்தது. பின்னர் கடலில் தத்தளித்த 11 பேர் மீட்கப்பட்டனர்.