தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கிணற்றில் குளிக்கச்சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவில்பட்டி அடுத்த கூசாலிப்பட்டியில் உள்ள கிணற்றில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தாமஸ் நகரைச் சேர்ந்த ஆகாஷ், பூசாரிப்பட்டியைச் சேர்ந்த ஜான் ஆகிய இரு சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்களின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆறுதல் கூறினார்.