சவுதி அரேபியா பாலைவனத்தில் கார் திசை மாறி சென்றதால் தெலுங்கானா சேர்ந்த இளைஞர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், வழக்கமான பணியையொட்டி, காரில் சக ஊழியர் ஒருவருடன் ருபா அல்- காலி பாலைவனம் வழியாக பயணித்தார்.
அப்போது ஜிபிஎஸ் சேவையை கார் இழந்ததால், பாதை மாறி பாலைவனத்தில் இருவரும் சிக்கிக் கொண்டனர். காரில் எரிபொருளும் தீர்ந்துபோனதால், அவர்களால் அங்கிருந்து நகர்ப்பகுதிக்கு வர முடியவில்லை. ஏறத்தாழ ஐந்து நாட்களாக வெயிலில் தண்ணீரின்றி தவித்த அவர்கள், உயிரிழந்தனர்.