நீலகிரி மாவட்டம் உதகை அருகே சாலையில் பயணித்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கூரையின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.
உதகை- கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் சென்னையைச் சேர்ந்தவர்கள் காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக காரின் ஓட்டுநர் முயன்றபோது எதிர்பாராத விதமாக கார் சாலையின் கீழே இருந்த வீட்டின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்களும், காரில் பயணித்தவர்களும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து உதகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.