திருச்சியில் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி பல்லவன் ரயில் புறப்பட்டது. அப்போது ஜெயச்சந்திரன் என்பவர் தாம்பரம் செல்வதற்காக ரயிலில் ஏற முயன்றபோது நிலைத்தடுமாறி படிக்கட்டு அருகே கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அவரை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.